செவ்வாய், 16 டிசம்பர், 2014

மாண்புடை மார்கழி




இன்று (16 டிசம்பர்) ஜெய ஆண்டு மார்கழி முதல் தேதி.

ஒவ்வொரு மதத்திலும் ஏதாவது ஒரு மாதம் இறைவழிபாடிற்கு சிறந்த மாதமாக கருதப்படும். ஹிந்து மார்கத்தில் ஆன்மீக சாதனைகளுக்கும், வழிபாடுகளுக்கும் மார்கழி மிகவும் சிறந்ததாக கருதப்படும். கீதையில் கண்ணன், "மாதங்களில் நான் மார்கழியாக உள்ளேன்" என்கிறான். தக்ஷினாயனத்தின் இறுதி மாதமான மார்கழி அணைத்து முறையான ஆன்மீக சாதனைகளுக்கும் சிறந்ததாகும்.

மனிதர்களின் 365 1/4 நாட்கள் விண்ணவர்களுக்கு (அறிவியல் சார்பாக சிந்தித்தாலும் தூர கணக்கீடு ஏறக்குறைய சரியாகத்தான் இருக்கிறது) ஒரு நாளாக கருதப்படும். தை-ஆணி உத்தராயணம் எனப்படும். அந்த உத்தராயண புண்ணியகாலம் விண்ணவர்களின் பகலாகவும் (day shift), ஆடி-மார்கழி ஆறுமாதங்கள் தக்ஷினாயன புண்ய காலம் விண்ணவர்களின் இரவாகவும் (night shift) கருதப்படும். இதில் மார்கழி மாதம் விண்ணவர்களின் பிரம்மமுஹூர்த்த காலமாக கருதப்படுகிறது.

பிரம்மமுஹூர்த்த பொழுதில் எந்த ஒரு செயலை துவங்கினாலும் அது வெற்றியடையும் என்பது நம்பிக்கை மட்டுமல்ல அறிவியல் சார்ந்ததும் கூட. அவ்வாறு விண்ணவர்களின் பிரம்மமுஹூர்த்தமான மார்கழியில் ஆன்மீக, ஆய்வு சாதனைகள் செய்ய, வெற்றி எளிதில் கூடும் என்பது அறிவியல் சார்ந்த நம்பிக்கை. 

தினமும் அதிகாலை 4:30-6:00 பிரம்மமுஹூர்த்த காலமாகும். மார்கழியில் ஓசோன் காற்றின் அளவு பிரம்மமுஹூர்த்த பொழுதில் அதிகமாக இருக்கும்.இந்த நேரத்தில் இந்த ஓசோன் (ozone) எனப்படும் சஞ்சீவினி காற்று (புவியியல் ரீதியாக) பூமிக்கு மிக அருகில் பேரளவில் இறங்கும். அந்த நேரத்தில் விழிக்கும் உயிர்களின் உடலில் புது ஆற்றல் புகுவதினால் சமயம் தியானம், ஜபம், பஜனை, ஆராய்ச்சி போன்றவை செய்ய, மனம் சாந்தியுடனும், ஒருமைப்பாடுடனும் இருக்கும்.  அந்த மார்கழியின் ஆன்மீக சாதனைகள் செய்ய வீண் கற்பனைகள் அடங்கி மன ஒருமைப்பாடு அதிகரிக்கும்.

மாணவர்கள் தினமும் அதிகாலை பிரம்மமுஹூர்த்தத்தில் படித்தால், படித்தவை கட்டாயம் மனதில் நிற்கும்!!! ஆராய்சிகள் தெளிவு பெரும். நம் வீடுகளில் கணவன் மனைவி இடையில் சில குழப்பங்கள் இருக்கும் பட்சத்தில் கணவன் மனைவியிடம் இரவு வேளையில் "சரி சரி, இப்போ தூங்கலாம், காலைல எழுந்து யோசிக்கலாம்" என சொல்ல கேட்டிருப்போம். அது பிரம்ம முகூர்த்தத்தை மனதில் கொண்டே. மார்கழியின் பிரம்ம முகூர்த்தம் இயற்கையின் விதிக்கேற்ப மேலும் சிறப்புகளை கொண்டது. 

பொதுவாக, தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தை  "பீடை" மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் நல்ல காரியங்கள் செய்வதை தள்ளி வைப்பார்கள். ஆனால் அது தவறு. இதன் சரியான சொல் வழக்கு "பீடுடை மாதம்" என்பதாகும். அதாவது மாதங்களில் எல்லாம் தனிச்சிறப்பு (பீடு உடைய) உடைய மாதம் என பொருள் உடையது மார்கழி மாதம்.

நன்றி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக